Tuesday 10 March 2015

அம்மா!

நெனச்சாலே இனிக்குதாத்தா.. 
நெஞ்சம் கனக்குதாத்தா!

சில்லுப்போன சிமெண்டுத்தர 
சிட்டுப்போல ஓட்டுவீடு...
பழய பாய் விரிச்சு... 
பஞ்சுப்போன தலகானி வச்சு...
அந்த ஆளுவீட்டுக்குள்ள... 
காத்தாடி கூட இல்ல...
அண்ணன்தம்பி அக்காதங்கை 
அன்போடு ஒறங்குவோமே ஆத்தா உன் கத கேட்டு...!

நெனச்சாலே இனிக்குதாத்தா.. 
நெஞ்சம் கனக்குது ஆத்தா!

காலையில கண்முழிச்சு
காட்டுக்குள்ள கடம முடிச்சு 
பல்லுகூட விளக்காம 
வரக்காபி குடிச்சுப்புட்டு...
பள்ளிக்கூடம் போறபோது 
நான் பைக்கட்ட மறந்தாலும் 
சத்துணவு சாப்பிட 
தட்டுவக்க மறக்கமாட்டே...

நெனச்சாலே இனிக்குதாத்தா.. 
நெஞ்சம் கனக்குது ஆத்தா!

ஒரு ஓலக்கு அரிசிபோட்டு 
உலவச்சு சொறுபோட்டு 
புள்ளங்க நாங்க சாப்பிட்டு
மிச்சமிருந்தா சாப்பிடுவே...
இல்லையினா சாப்பிட்டேன்னுவே...

நெனச்சாலே இனிக்குதாத்தா.. 
நெஞ்சம் கனக்குது ஆத்தா!

கயித்த கட்டி காரு ஓட்டி 
பூம் பூம் சத்தம்போட்டு...
கயித்துக்குள்ள ஒங்கள 
காரேற கூப்பிட்டு...
தம்பி தங்கை கூட்டிக்கிட்டு 
ஊரெல்லாம் சுத்திவந்தேன்...

நெனச்சாலே இனிக்குதாத்தா.. 
நெஞ்சம் கனக்குது ஆத்தா!

இத்தன போல் எத்தனையோ 
இருக்குதாத்தா எடுத்த்சொல்ல...

முறுக்குமீச வீரப்பேச்சு... 
உள்ளுக்குள்ள ஈர மனசு!
என்ன பெத்த ஐயன் பத்தி 
எடுத்து சொல்ல இந்த ஜென்மம் 
போதாது போதாது... !

அம்மன் கோயில் போனாக்க 
ஆத்தா ஒன் மொகந்தான் !
ஐயன் கோவில் போனாக்க 
அப்பன் அவர் முகந்தான்..!
நான் கும்பிடுற சாமியெல்லாம் 
ஆத்தா ஐயா நீங்க தானே...
நான் தொட்டதெல்லாம் 
வெற்றிபெறும் காரணமும் அதுதான...!

இப்ப படுக்க பஞ்சு மெத்த... 
மாடிவீடு ஏசி ரூமு...
இருக்கு இப்ப பல காரு... 
இல்லையந்த சந்தோசம்!!!

மறுபிறவி வேணுமாத்தா 
உன் மடியில் பிறப்பதற்கு...
மறுபிறவி வேணுமாத்தா 
ஐயன் வழி வருவதற்கு...!!!

பணக்கார வாழ்க்க வேணாம்... பந்தம்பாசம் கொறஞ்சு போகும்!!!
பரபரப்பு நகரம் வேணாம்... பட்டிக்காடு அது போதும்!!!
மாடிவீடு எதுவும் வேணாம்... ஓட்டுவீடு ஒன்னு போதும்!!!
மறுபிறவி எடுப்போம் ஆத்தா உன் மடியில் பிறப்பதற்கு...!!!!!!

மக்கள் மன்றம்.

அப்பா

"ஆ" என அலறும்போது 
"அம்மா" வை அழைப்பதுபோல்...
நிம்மதிப் பெருமூச்சில் 
நித்தம் சொல்லும் வார்த்தை "அப்ப்பா"!

நாம் நிம்மதியாய் வாழ்வதற்காய்
நித்தம் நித்தம் உழைத்ததற்காய்...
நம் நிம்மதிப் பெருமூச்சில் 
நித்தம் சொல்லும் வார்த்தைதானோ "அப்ப்பா" !

வெயிலில் நடந்த நான் 
நிழல் தேடி ஒதுங்கும்போதும்...
கால்கடுக்க நின்ற நான்
காலாற அமரும்போதும்...
தண்ணீர் தாகம் தீர்க்கும்போதும், 
பசிதீர்த்து உறங்கும்போதும்... 
இத்தனைபோல் அத்தனைக்கும் 
என் நிம்மதிப் பெருமூச்சில் 
நித்தம் வரும் வார்த்தையது "அப்பா" !

ஏன் இப்படி? என்னுள் கேட்கிறேன்!

கூடையில் காய்கறியும்... சந்தையில் மீனும்...
தனக்குப் பிடித்ததை வாங்காமல்
நமக்குப் பிடித்ததை வாங்கிவந்த "அப்பா" !

சாப்பாட்டினைப் பிசையும் முன்னே
சதா கேட்கும் வார்த்தை
பிள்ளைகளுக்கு இருக்கா?
அதுதான் "அப்பா"!

இதோ... வெளிநாடுகளில்
இல்லறம் மறந்து, உற்றம் சுற்றம் துறந்து
தான் பெற்ற மக்களுக்காய்
தன் வாழ்வினையே தொலைக்கும் 
என் அண்ணன் தம்பிகள்தான் "அப்பா"!

அப்பா என்றால் தியாகம்!
அப்பா என்றால் தைரியம்!
அப்பா என்றால் நண்பன்!
அப்பா என்றால் முன்னோடி!

ஆம், 
உள்ளுக்குள் வலியோடு 
வெளியில் நமக்காய் சிரித்தவர்!
நமக்கு வலியெனில் 
தனக்குள் அழுதவர்!

அளவற்ற நேசத்தினைப் 
பூட்டிவைத்துக் கொண்டு 
பொய்க்கோபம் காட்டியவர்!

நாம் விழிக்கும்போது அவர் வேலைக்கும்
நாம் தூங்கியபின்பு அவர் வீட்டிற்குமாய்...
நாம் தூங்கும்போது மட்டுமே 
நம்மிடம் பாசம் காட்டிய உழைப்பாளி!

தனக்கென்று சிந்தித்ததுமில்லை...
சேர்த்து வைத்ததுமில்லை...!
எல்லாமே நமக்காக!

அம்மாவிடம் பேசும்போது
நெகிழ்ந்து பேசும் நம் மனசு..
அப்பாவிடம் பேசும்போது
நம் குரல்கூட நிமிர்ந்து பேசும்!

எதிரில் வருவது சிங்கமே என்றாலும்
எதற்கும் அஞ்சமாட்டேன்...
எனதருகில் என் அப்பா!

உயரே தூக்கிப் போட்டுப் பிடித்தபோது
நாம் உற்றுநோக்கிச் சிரித்த முகம் "அப்பா" !

உன்னத உறக்கத்தை
உணர்வோடு கொடுத்த நெஞ்சம்.. "அப்பா"!

நமக்கு உயிரை மட்டுமல்ல..
தாய், தமக்கை, தமையன் என
உறவுகளையும் கொடுத்த தெய்வம் "அப்பா"!

சைக்கிளோட்ட மட்டுமல்ல...
வாழ்வின் வித்தைகளையும் கற்றுக்கொடுத்தவர்!

நாம் நிம்மதியாய் வாழ்வதற்காய்
நித்தம் நித்தம் உழைத்ததற்காய்...
நிம்மதிப் பெருமூச்சில் 
நித்தம் சொல்லும் வார்த்தை "அப்பா"!

மக்கள் மன்றம்.