ரேசன்கடையிலுள்ள பொருட்களின் ஸ்டாக் நிலவரம் பற்றி அறிய....?
***********************************************************************************
ரேஷன் கடைக்கு செல்வோரில் பல பேருக்கு இந்த அனுபவம் கிடைத்தி...ருக்கும். காலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்றவைவந்திருக்கும். நாம் மாலையிலோ அல்லது மறுநாளோ சென்றால், அவைகள்இருந்தும் கூட "ஸ்டாக் இல்லை" என்று சொல்லி விடுவார்கள்.
இனி அப்படி ஏமாற்ற முடியாது. ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினாலே போதும், அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் அறிந்துக் கொள்ளலாம்.
எஸ்.எம்.எஸ் அனுப்பும் முறை:
குடும்ப அட்டைதாரர்கள் (PDS) இடைவெளி (மாவட்ட குறியீடு) இடைவெளி (கடை எண்) என்ற முறையில் எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.
உதாரணமாக :-
PDS 01 BE014
என்ற தகவலை 9789006492, 9789005450, 9176480226, 9176480227, 9094831766, 9790725349, 9176480216ஆகிய ஏதேனும் ஒரு செல்பேசி எண்ணுக்கு அனுப்பினால் உடன் ரேஷன் கடையில் பொருள் வாரியான அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் பெறலாம்.
மேலே கண்ட எஸ்.எம்.எஸ். தகவலில் உள்ள 01 என்ற குறியீடு சென்னை (வடக்கு) மாவட்டத்திற்கு உரியது. எனவே, இந்த குறியீட்டினை தங்களதுமாவட்டக் குறியீட்டினைக் கொண்டுமாற்றிட வேண்டும்.
அதுபோல் BE014 என்ற கடை குறியீடு (shop code) தங்களது குடும்ப அட்டையிலுள்ள முன்பக்க கீழ்ப்பகுதியில்அச்சடிக்கப்பட்டுள்ளவாறு எஸ்.எம்.எஸ். பதிவு செய்ய வேண்டும்.
குடும்ப அட்டை எண்ணில் முதல் இரண்டு எழுத்துக்கள் மாவட்ட குறியீட்டு எண்ணாகும். உதாரணமாக, 01/G/0557070 என்ற குடும்ப அட்டை எண்ணில் “01” என்பது சென்னை (வடக்கு) மாவட்ட குறியீடாகும். இதுபோல் ஒவ்வொரு மாவட்ட குறியீடு குடும்ப அட்டை எண்ணில் உள்ளது. எனவே, அந்த குறியீட்டு எண்ணை சரியாக அளித்து நியாய விலைக் கடையின் இருப்பு விவரத்தைப் பெறலாம்.
எஸ்.எம்.எஸ். அனுப்பும் கணினியில்(server) மாலை 5 மணிக்கு மேல் அதிகபளு ஏற்படுவதால் மேற்கண்ட தகவல் பெறும் சேவையை காலை நேரங்களில் உடனடியாக பதில் தகவல் பெறும் வண்ணம் பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்...!
Monday, 27 April 2015
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
தேயிலை மற்றும் காபி உற்பத்தியிலிருந்து மட்டும் இலங்கைக்கு அரசுக்கு, வருடத்துக்கு 2,395 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானம் வருகிறது என்...
-
வெளிநாட்டுக்குப் போய்ச் சம்பாதித்து, பின்னர் சொந்த ஊருக்கு வந்து வீடு, வாசல் கட்டும் காலம் மலையேறிவிட்டது. இப்போதெல்லாம் வெளிநாட்டில் வேலை ச...
-
84 நோபல் பரிசுகள் பெற்ற ஒரே நாடு... உங்களுக்கு தெரியுமா? எல்லோரும் தெரிந்து கொள்ள ஒரு பதிவு ஒரு சின்ன குட்டி நாடு மொத்தமே ஒன்றரை கோடி தான்...
-
1879 ஆம் ஆண்டு பிறந்த ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், இயற்பியல் உலகின் ஒப்பற்ற விஞ்ஞானி. தனது மூன்று வயதுவரை சரியாக பேசமுடியாமல் அவதிப்பட்டார். நான்...
-
பிறர் எழுதியதை நாம் ஏன் வாசிக்க வேண்டும்? வாசிப்பு எதைத் தருகிறது? படைப்பு எதைத் தருகிறது என்பதிலிருந்து மேற்கண்ட கேள்விகளுக்கான விடையை அணு...
-
குமாருக்கு அந்த நாயைக் கண்டாலே எரிச்சலாக இருந்தது. அது அவன் மனைவி வளர்க்கும் நாய்.ஒரு நாள் அதைக் காரில் ஏற்றிக்கொண்டு போய், இரண்டு கி.மீட்டர...
-
ரேசன்கடையிலுள்ள பொருட்களின் ஸ்டாக் நிலவரம் பற்றி அறிய....? ********************************************************************************...
-
முன்னணி நாடுகளை பின்னுக்குத்தள்ளிய பின்லாந்து... தரமான கல்வியில் முதலிடம்!... ‘பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு’(OCED...
-
தமிழகத்தில் உள்ள அணைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) அலைபேசி எண்,அலுவலக தொலைபேசி எண் ,மற்றும் பேக்ஸ் எண்கிழே கொடுக்கப்பட்டுள்ளது..! (பயன் ...
-
நமது டாக்டர்கள் நமக்கு மருந்துகளை எழுதும்போது மருந்துகளின் "பிராண்ட்"பெயரில்தான் எழுதித் தருவார்கள். அந்த மருந்துகளில் அடங்கியுள்ள...
0 comments:
Post a Comment